1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (11:44 IST)

முதல் நாளில் சுணங்கிய போர் தொழில்.. விடுமுறை நாட்களில் எழுச்சி!

கடந்த வாரம் வெளியான டக்கர் மற்றும் போர் தொழில் ஆகிய படங்களில் போர் தொழில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஓடி வருகிறது. இந்த படத்துக்கு இந்த வாரமும் நல்ல கலெக்‌ஷனைக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறது.

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் போர்த் தொழில். நேற்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படம் முடிந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆனாலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதும், தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் திரைகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் வார இறுதியில் இந்த படம் 5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் நாளில் சுமார் 1 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், அடுத்த இரண்டு நாட்களில் தலா 2 கோடி என மொத்தம் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.