1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (08:58 IST)

விறுவிறுப்பான த்ரில்லர்… பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் அசோக் செல்வனின் போர்த் தொழில்!

அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் போர்த் தொழில். நேற்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தொடர் கொலைகள் செய்யும் ஒரு சீரியல் கில்லரை அனுபவம் மிக்க அதிகாரியான சரத்குமாரும், இளம் போலீஸ் அதிகாரியான அசோக் செல்வனும் இணைந்து கண்டுபிடிக்கும் திரில்லர் கதைதான் போர்த்தொழில். கதைக்கு தேவையில்லாத காட்சிகள் இல்லாமல் விறுவிறுப்பாக திரைக்கதையை இயக்குனர் உருவாக்கியுள்ளதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ஹாலிவுட்டில் வெளியாகி ஹிட்டான செவன் பட பாணியில் இந்த படம் இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் நேர்மறையான விமர்சனங்களை அடுத்து படத்துக்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.