திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva

‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் எப்போது? மணிரத்னம் பேட்டி

மணிரத்னம் இயக்கிய பிரமாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன என்பதும் இந்த படம் இன்று 700 திரையரங்குகளில் தமிழகத்தில் வெளியாகி உள்ளதால் மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இரண்டாம் பாகம் எப்போது என்பது குறித்து மணிரத்னம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும் 6 முதல் 9 மாதங்களில் அந்த பணிகள் முடிந்துவிடும் என்றும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்க்கலாம் என்றும் மணிரத்தனம் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva