திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2022 (16:40 IST)

”ரஜினி விரும்பிய கதாபாத்திரத்தில் நடித்தது பெருமை”… சரத்குமார் கருத்து

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து படக்குழுவினர் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் “நான் இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் (வில்லன்) கதாபாத்திரத்தில் நடிக்கவா எனக் கேட்டேன். ஆனால் இயக்குனர் மணிரத்னம் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார்.” என ஜாலியாக விழா மேடையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து இப்போது பேசியுள்ள சரத்குமார் “ரஜினி சார் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெருமை” என்று கூறியுள்ளார்.