திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:47 IST)

ஜேடி-ஜெர்ரி இயக்கும் அடுத்த படம்: 19 ஆண்டுகளுக்கு பின் இரண்டாம் பாகம்?

jd jerry
19 ஆண்டுகளுக்கு முன் ஜேடி-ஜெர்ரி இயக்கிய சூப்பர் ஹிட் படம் ஒன்று இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
‘லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படத்தை இயக்கிய ஜேடி-ஜெர்ரி இதற்குமுன் உல்லாசம், விசில் ஆகிய திரைப்படங்களை இயக்கினார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் விசில் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜேடி-ஜெர்ரி  இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2003ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தில் ஷெரின், காயத்ரி ரகுராம் உள்பட பலர் நடித்திருந்தனர் என்பதும், கடைசிவரை இந்த படத்தின் சஸ்பென்ஸ் பார்வையாளர்களால் யூகிக்க முடியாத அளவுக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
விசில் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஷெரின் ஒப்புக் கொண்டதாகவும் இந்த படத்தை விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது