ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (09:15 IST)

“பொன்னியின் செல்வன் ஷூட்டிங் பற்றி கேட்டு ஷாக் ஆன ராஜமௌலி…” ஜெயம் ரவி பகிர்ந்த தகவல்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.

கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இதையடுத்து இந்தியா முழுவதும் படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் படம் சம்மந்தமாக ஒரு சுவாரஸ்யமான தகவலை ஜெயம் ரவி பகிர்ந்துள்ளார். இயக்குனர் ராஜமௌலியிடம் இரண்டு பாகங்களையும் சேர்த்து 150 நாட்களுக்குள் படமாக்கி முடித்ததை சொன்ன போது அதைக் கேட்டு அவர் ஆச்சர்யப்பட்டாராம்.

“எப்படி முடித்தீர்கள் அதற்காக எப்படி திட்டமிட்டு வேலை செய்தீர்கள்” போன்ற விஷயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார் என ஜெயம் ரவி கூறியுள்ளார்.