1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (14:58 IST)

ஒரே நேரத்தில் 2 பொன்னியின் செல்வன் – சாத்தியமா ?

பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக மணிரத்னமும் வெப் சீரிஸாக ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும் எடுக்க இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக் விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கும். இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது.

இந்த நாவலை ஆதிகாலம் தொட்டு எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோர் எடுக்க முயன்று தோல்வியடைந்தனர். அதை அடுத்து இயக்குனர் மணிரத்னம் சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னியின் செல்வனை கையில் எடுத்து பின்புக் கிடப்பில் போட்டார். இப்போது மீண்டும் அதை தூசு தட்டி மீண்டும் பொன்னியின் செல்வன் முன் தயாரிப்பு வேலைகளை செய்துவருகிறார்.

இந்நிலையில் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா எம்.எக்ஸ் என்ற நிறுவனத்தோடு இணைந்து பொன்னியின் செல்வனை வெப் சீரிஸாக பல மொழிகளில் உருவாக்க இருக்கிறார். ஒரே நாவலை ஒரே நேரத்தில் படமாக்க இருப்பதால் கோலிவுட்டில் பயங்கர எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆனால் ஒரேக் கதையை எப்படி இருவர் உரிமைப் பெற்று  படமாக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ?. பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய கல்கி இறந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால் அந்நாவல் நாட்டுடமையாக்கப்பட்டு விட்டது. அதனால் நாவலை யார் வேண்டுமானாலும் அதை உபயோகித்துக் கொள்ளலாம். எனவே ஒரே நேரத்தில் இருவரும் படமாக்குவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை.