ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (08:27 IST)

“விக்ரம் படத்தின் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது…” கமல் மகிழ்ச்சி!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நேற்று படக்குழுவினரோடு நடிகர் கமல்ஹாசன் பார்த்தார்.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 3 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இந்த படத்தை சென்னையில் உள்ள திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரோடு பார்த்தார். பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் பேசும் போது “விக்ரம் படத்தின் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது. அது எனக்கு சந்தோஷம்தான். அதைக் கொண்டாடதான் நான் இங்கு வந்துள்ளேன்” எனப் பேசினார்.

பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்க 1990 களில் கமல்ஹாசன் முயற்சி செய்து அதைக் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.