1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified புதன், 5 அக்டோபர் 2022 (16:11 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டு....ஜெயம் ரவி நெகிழ்ச்சிப் பதிவு

பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயம் ரவியை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளது குறித்து, அவரே சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மணிரத்னம். பல வெற்றிப் படங்களை இயக்கியவர், கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக இயக்கியிருந்தார்.
செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி  நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் குவித்து வருகிறது. இப்படத்தை சினிமா பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொ.செ-1 படத்தைப் பார்த்துவிட்டு, இப்படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்துள்ள, ஜெயம் ரவியை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து, ஜெயம் ரவி தன் டிவிட்டர் பக்கத்தில்,’’ உங்களுடன் நடந்த ஒரு நிமிட உரையால் என் வாழ்க்கையில் புதிய உற்சாகத்தைத் தந்தது.  நீங்கள் எனக்கு கூறிய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி…படமும், என் நடிப்பும் உங்களுக்குப் பிடித்திருந்தது என்று கூறியிருந்தீர்கள் அதற்கு நன்றி’’’ எனப்பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj