1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (16:54 IST)

பொன்னியின் செல்வன் ஆடியோ ரிலீஸ் விழாவில் ரஜினி & கமல்? லேட்டஸ்ட் தகவல்!

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீடு ஜூலை மாதத்தில் தஞ்சாவூரில் பிரம்மாண்டமாக நடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையிலேயே நடக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த விழாவில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இரு முன்னணி நடிகர்கள் கலந்துகொள்ள பொன்னியின் செல்வன் டீம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான மணிரத்னம் ரஜினிகாந்தை சந்தித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.