1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (16:40 IST)

பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி இதுவா? வெளியான தகவல்!

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீடு ஜூலை மாதத்தில் தஞ்சாவூரில் பிரம்மாண்டமாக நடக்கும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது ஆடியோ வெளியீடு தேதி பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜூலை 7 ஆம் தேதி அந்த விழா நடக்கும் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.