1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (18:38 IST)

நாளை மிகப்பெரிய அறிவிப்பு என லைகா தகவல்: ‘சந்திரமுகி 2’ அறிவிப்பா?

lyca
நாளை மாலை மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக லைகா நிறுவனம் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. 
 
லைகா நிறுவனம் ஏற்கனவே பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
அதே நேரத்தில் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் சந்திரமுகி 2  திரைபடத்தில் லைகா நிறுவனம்தான் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இருப்பினும் நாளை மாலை 6 மணி வரை லைகா நிறுவனம் தரும் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்