1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (12:46 IST)

சித்ரா மரணம்: சின்னத்திரை நடிகர், நடிகைகளிடம் விசாரணை!

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று இரவு முழுவதும் சின்னத்திரை தொடரில் நடித்துவிட்டு இன்று அதிகாலை 2.30 மணிக்கு அறைக்கு திரும்பிய சித்ரா தனது கணவரிடம் தான் குளிக்க போவதாக கூறி விட்டு கதவை பூட்டிக்கொண்டதாகவும் பின்னர் அவர் திடீரென சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது
 
எனவே அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் மனவருத்தம் இருந்திருக்கலாம் அல்லது மன அழுத்தம் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதனை அடுத்து சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது 
 
இந்த விசாரணையின் முடிவில் அவரது மரணத்திற்கான காரணங்கள் தெரிய வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்