1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2020 (07:29 IST)

சூரப்பா மீதான விசாரணையை நிறுத்துங்கள்: முதல்வருக்கு ஆளுனர் கடிதம்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழுவை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இந்த குழு தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்
 
இந்த நிலையில் சூரப்பா மீதான விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்/ இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது/ இந்த நிலையில் கமலஹாசனை அடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் இந்த சூரப்பா மீது விசாரிக்க குழு அமைத்து அதற்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தை கடிதத்தில் ’அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்து உள்ளார்
 
மேலும் கலையரசன் தலைமையிலான குழு விசாரணையை உடனே நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து சூரப்பா மீதான விசாரணை விவகாரத்தில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்