திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (15:52 IST)

தியேட்டரில் வெளியாகி இரண்டு வாரத்திலேயே … சாய்பல்லவி நடித்த ’விராட பர்வம்’ ஓடிடி ரிலீஸ்

சாய்பல்லவி மற்றும் ராணா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விராட பர்வம்’

சாய்பல்லவி, ராணா, பிரியாமணி மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகிய நடிகர்கள் நடித்துள்ள விரட்ட பருவம் கடந்த ஜூன் 17 ஆம் தேதி வெளியானது. கதாநாயகன் ராணாவை விட சாய்பல்லவிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சாய்பல்லவி நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதை அடுத்து தற்போது 15 நாட்களுக்குள்ளாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இதுபற்றி அறிவிப்பை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.