1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 ஜூன் 2025 (09:13 IST)

போதைப் பொருள் வழக்கு… ஜாமீன் கேட்டு ஸ்ரீகாந்த் மனுத்தாக்கல்?

போதைப் பொருள் வழக்கு… ஜாமீன் கேட்டு ஸ்ரீகாந்த் மனுத்தாக்கல்?
தமிழ் சினிமாவில் ரோஜாக் கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து சில ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தார்.ஆனால் சமீபகாலமாக அவரின் எந்த படமும் ஹிட்டாகவில்லை. அதனால் மார்க்கெட் இல்லாத நடிகர்கள் பட்டியலில் அவர் இணைந்தார்.

சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் தன்னிடம் ஸ்ரீகாந்த் கொக்கைன் வாங்கிப் பயன்படுத்தியதாகவும், அதை தானே நேரில் பார்த்ததாகவும் வாக்குமூலம் கொடுக்க, ஸ்ரீகாந்த்துக்கு நேற்று போதைப் பொருள் சோதனை செய்யப்பட்டது. அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உண்மை எனத் தெரியவர அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அவருக்கு முதல்  வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதைக் காரணமாக சொல்லி அவர் இந்த ஜாமீன் மனுத்தாக்கலை செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.