1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 20 பிப்ரவரி 2021 (15:04 IST)

பிட்ட காதலு டீமுடன் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட மேக்கிங் வீடியோ!

பாலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சைக்குள்ளான லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடர் போன்று தெலுங்கு மொழியில் பிட்ட கதலு என்ற ஆந்தாலஜி வெப் தொடர் தற்போது உருவாகி வருகிறது. 
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் இயக்கி உள்ள இந்த தொடரில் அமலா பால், ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, ஈஷா ரெப்பா மற்றும் லக்‌ஷ்மி மஞ்சு ஆகியோர் நடித்துள்ளனர்.
காதல், ஏமாற்றம், துரோகம், காமம் என அனைத்து எமோஷனலும் கலந்து உருவாக்கியுள்ளார். 
இந்த வெப் தொடர் நேற்று (19.2.2021) வெளியானது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கிறது. 
இந்நிலையில் தற்போது பிட்ட காதலு டீமுடன் ஸ்ருதி ஹாசன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 
மேலும், மேக்கிங் வீடியோ மற்றும் புகைப்படங்கள் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.