திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஜனவரி 2021 (18:29 IST)

ஸ்ருதிஹாசனின் காதல் சஸ்பென்ஸ் உடையுமா??

நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளை இன்று தனது காதலருடன் இணைந்து கொண்டாடினார் இதன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகிவருகிறது.

சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும் தன் சொந்த முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகியுள்ளார்.

தற்போது ஸ்ருதி ஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வருகிறார். ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இப்படம் விரையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்று தனது 35 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஸ்ருதிஹாசன் ஓவியர் சாந்தனு ஹசாரிகாவுடன் இணைந்து பிறந்தநாளைக் கொண்டாடினார்.
ஆனால் ஸ்ருதிஹாசனுகு காதலரா ? அல்லது நண்பரா என்ற விவரம் தெரியவில்லை .

தனது இன்ஸ்டாகிராமில் இப்புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள ஸ்ருதிஹாசனுடன், இப்படத்தில் டூடுல்கலைஞரான சாந்தனு ஹாசாரிகா நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் வைரலானது.

அவரது பிறந்தநாளின்போது, அவருக்கு இன்ப அதிர்ச்சி வந்தது.

அதாவது, கன்னடத்தில் கேஜிஎஃப் படம் மூலமாக இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் பிரசாத் நீல் அடுத்ததாக பிரபாஸை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார். சலார் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக தற்போது அறிவிப்பு வெளியானது.

எனவே ஸ்ருதிஹாசன் மற்றும் ஓவியர் சாந்தனு ஹசாரிகா இருவரையும் இணைத்து செய்திகள் பகிரப்படுவருகிறது. இது காதலா நட்பா என்பதை இனிதான் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்துவார் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்