திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (17:48 IST)

அமலா பால் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள பிட்டா காதலு டிரைலர் ரிலிஸ்!

நடிகைகள் அமலாபால் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ள பிட்டாகாதலு எனும் வெப் சீரிஸின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தற்போது இந்திய மார்க்கெட்டை கைப்பற்றும் பொருட்டு பல நேரடி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிட்டா காதலு என்ற தொடரை தயாரித்துள்ளது.

அமலாபால், ஸ்ருதி ஹாசன், ஈஷா ரெபா, கொலைகாரன் படப் புகழ் ஆஷிமா நர்வால் ஆகிய முன்னணி நடிகைகள் நடித்துள்ள இந்த தொடரின் டீசர் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் அமலா பால் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள கவர்ச்சியான காட்சிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.