என்ன மொறைப்பு... கொஞ்ச சிரிச்சா தான் என்ன? ஸ்ருதி ஹாசனின் கிரேசி போஸ்!
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.
சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார்.
காதல் முறிவுக்கு பின்னர் கேரியரில் அதீத கவனத்தை செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன் சமீபநாட்களாக கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி படவாய்ப்பிற்கு வழிதேடி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது யாரும் இதுவரை கொடுக்காத விதத்தில் கண்ணு ரெண்டையும் உருட்டி... கழுத்தை ஒரு அங்குலத்துக்கு மேலே தூக்கியபடி வித்யாசமான கிரேசி போஸ் கொடுத்து இணையாசிகளை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளார். அழகான கவர்ச்சி ட்ரஸ் போட்டுக்கிட்டு இப்படியாமா போஸ் கொடுக்கணும் என எல்லோரும் புலம்பி வருகின்றனர்,