ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (00:38 IST)

ஏழைகளுக்கு உதவும் நடிகர் விஜய்....பிரபல நடிகை தகவல்

சமீபத்தில் விஜய் வெளிநாட்டில் இருந்து 3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்ய வரிச்சலுகை கேட்டிருந்தார். இதுகுறித்து நேற்று  சென்னை உயர்நீதிமன்றம் நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமெனக் கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

இதுநாடு முழுவதும் பேசு பொருளானது. இன்றும் பல்வேறு மீடியாக்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவளித்துள்ளார்.

இதுகுறிட்து அவர் கூறியுள்ளதாவது: நடிகர் விஜய் ஏழைகளுக்கு உதவி செய்துவருகிறார். அவர் கொரொனா நிவாரண நிதியை வழங்கியுள்ளார். மாணவர்களின் படிப்புக்கும் உதவுகிறார். இதையெல்லாம் மறந்துவிட்டு நீதிமன்றத்தில் நடந்தவற்றைப் பற்றியே பேசக் கூடாது என அதிரடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.