ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (13:06 IST)

வரியை குறைக்க சொல்வது அவரவர் உரிமை! - நடிகர் விஜய்க்கு கார்த்திக் சிதம்பரம் ஆதரவு!

நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்ட விவகாரத்தில் கார்த்திக் சிதம்பரம் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.

தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்திலிருந்து வாங்கினார். இந்த காருக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் வரியில் தளர்வு அளிக்க கோரி நடிகர் விஜய் அப்போது மனு அளித்திருந்தார்.

மனு அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மனு மீதான விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதித்துள்ளது.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கார்த்திக் சிதம்பரம் “இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை, அவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு” என தெரிவித்துள்ளார்.