செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (19:17 IST)

ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை கொண்டாடும் ரஜினி-அஜித் ரசிகர்கள்

சமீபத்தில் வெளியான ஐந்து படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்த 'கனா' திரைப்படம் நம்பர் ஒன் படத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் கடின உழைப்பும் ஒரு முக்கிய காரணம்

இந்த நிலையில் விரைவில் வரவுள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களும் மாபெரும் ஆர்ப்பாட்டத்துடன் கொண்டாடவுள்ளனர். ஏனெனில் ஐஸ்வர்யாவின் பிறந்த நாளான ஜனவரி 10ஆம் தேதி தான் ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் 'ஜனவரி 10' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஒரே ஒரு வார்த்தைக்கான டுவிட்டர் பதிவுக்கு ஆயிரக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது.