1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (08:31 IST)

அரசு வேலை கொடுத்தா எனக்கு பரப்புன நோய் போய்டுமா? கர்ப்பிணி பெண் கொந்தளிப்பு

மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் எச்.ஐ.வி நோய் பரப்பப்பட்ட கர்ப்பிணிப்பெண் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் அவருக்கு செலுத்தப்பட்டது. இதனால் அவருக்கும் எச்.ஐ.வி தொற்று பரவிக்கொண்டது. வயிற்றில் உள்ள சிசுவிற்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க நிறைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 
 
இது முழுக்க முழுக்க மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே. இவர்களின் கவனக்குறைவால் பாவம் அந்த அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. இது சம்மந்தமாக 3 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அரசு வேலை கொடுப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண். ஒரு பாவமும் செய்யாத என்னை இப்படி செய்துவிட்டார்கள். என்னை எல்லாரும் கேவலமாக பார்க்கிறார்கள். எல்லாரிடமும் போய் நான் நல்லவள் என கூற முடியுமா? இதுக்கு பேசாமல் என்ன விஷ ஊசி போட்டு கொன்றிருக்கலாம். எங்களுக்கு அரசு வேலை எல்லாம் வேணாம். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அனைத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.