திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (19:01 IST)

’’ ரியல் ஹீரோ’’ சோனு சூட் புகைப்படத்தை பூஜைஅறையில் வைத்து கடவுளாக வணங்கும் மக்கள் !

கொரோனா காலப் பொது ஊரடகத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கும் உதவி செய்த நடிகர் சோனு சூட்டின் இரக்க குணம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

அத்துடன் படிக்க முடியாத சிறுமிகள்,ஏழை விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் எனப் பலருக்கும் அவர் உதவி செய்து ரியல் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அவரது சேவைக்காக ஐநா சபை விருதுகள் கொடுத்து கௌரவித்தது. சமீபத்தில் அவருக்கு சிலை வைத்து கொல்கத்தாவில் வணங்கினர்.இந்நிலையில் ஒவ்வொருத்தர் வீட்டிலும் சோனு சூட்டின் புகைப்படம் வைக்கப்பட்டு அவரை கடவுளாகவே வணங்கி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் அவரது படத்திற்கு பூஜை செய்து தேங்காய் உடைப்பது பலரையும்  நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.