மீண்டும் வாட்சன், நிகிடி: சிஎஸ்கே அணியில் திடீர் மாற்றம்

மீண்டும் வாட்சன், நிகிடி: சிஎஸ்கே அணியில் திடீர் மாற்றம்
siva| Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2020 (19:34 IST)
மீண்டும் வாட்சன், நிகிடி: சிஎஸ்கே அணியில் திடீர் மாற்றம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 49வது போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய உள்ளது


இன்றைய போட்டியில் சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டீபிளஸ்சிஸ் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வாட்சன் இணைந்துள்ளார் அதேபோல் ஒரே ஓவரில் 30 ரன்களுக்கும் மேலாக கொடுத்த நிகிடி மீண்டும் அணியில் இணைந்துள்ளார்

இரு அணிகளின் வீரர்கள் பின்வருமாறு:
கொல்கத்தா அனி: கில், ரானா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், மோர்கன், சுனில் நரேன், ரிங்கு சிங், பாட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி

சென்னை அணி: ருத்ராஜ், வாட்சன், அம்பத்தி ராயுடு, தோனி, ஜெகதீசன், ஜடேஜா, சாம் கர்ரன், சாண்ட்னர், தீபக் சஹார், கரண்சர்மா மற்றும் நிகிடி
இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியத்துவம் இல்லாத போட்டி என்றாலும் கொல்கத்தா அணி இன்று வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

அதேநேரத்தில் இன்று சென்னை வெற்றி பெற்றால் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :