திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (11:48 IST)

இப்படி செஞ்சுட்டாங்களே! செம்ம கடுப்பில் விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார் பட்டி சிங்கம்’ படத்தை செல்லா அய்யாவு  இயக்கி உள்ளார்.



இப்படம் டிசம்பர் 21ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் வெளியாகும் அதே நாளில், சீதக்காதி, மாரி2, கனா, அடங்க மறு உள்ளிட்ட படங்கள் வெளியாகிறது. இதனால் விஷ்ணு விஷால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். இது தொடர்பாக விஷ்ணு விஷால்  கூறுகையில்,
 
‘‘எனது சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை ஏற்கனவே திரைக்கு கொண்டு வர முயற்சித்து வேறு படங்கள் வெளியானதால் தள்ளிவைக்கும் நிலைமை ஏற்பட்டது. இறுதியாக வருகிற 21–ந்தேதி வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்தது. அப்போது வேறு புதிய படங்கள் வராது என்றும் உறுதி அளித்தார்கள். ஆனால் இப்போது நிறைய பெரிய பட்ஜெட் படங்களை வெளியிட அனுமதி கொடுத்து விட்டனர். தயாரிப்பாளர் சங்கம் படங்கள் வெளியீட்டுக்கு தேதிகள் ஒதுக்குவதில் உறுதியாக இல்லாமல் போனது வருத்தமாக இருக்கிறது.
 
இனிமேல் அதன் முடிவுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்களா? என்பது கேள்விக்குறி. எத்தனை படம் வந்தாலும் சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்துக்கு வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது. இவ்வாறு கூறினார்.