'ஒத்த செருப்பு' படத்திற்கு கிடைத்த 'ஒற்றை' எழுத்து சென்சார்

Last Modified திங்கள், 24 ஜூன் 2019 (22:00 IST)
பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டுமே நடித்த ஒரு படம் தான் 'ஒத்த செருப்பு. உலகிலேயே ஒரு படத்தை ஒருவரே இயக்கி, தயாரித்து நடித்த ஒரு திரைப்படம் என்ற பெருமையை இந்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் பெற்றுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தபோது கோலிவுட் திரையுலகமே பார்த்திபனை பாராட்டி தள்ளியது ஞாபகம் இருக்கலாம்
இந்த நிலையில் 'ஒத்த செருப்பு படத்திற்கு சென்சார் அதிகாரிகள்
'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த சான்றிதழ் குறித்து பார்த்திபன் கூறியபோது, ''குவி ஆடி போட்டுக்கொண்டு பார்த்தும், நிறையன்றி வேறின்றி, பாராட்டி, 'யூ' கொடுத்த சென்சாருக்கு எனது நன்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்று பார்த்திபன் வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் இந்த படம் விரைவில் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டுள்ளதால் வெகுவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது
இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இவர்தான் பார்த்திபன் இயக்கிய முந்தைய படமான 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்திற்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :