வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 15 ஜூன் 2019 (17:42 IST)

ஏடிஎம் - மெஷினில் பணம் இல்லை என்றால் அபராதம்! ரிசர்வ் வங்கி அதிரடி

ஏடிஎம் மெஷின்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு ஏற்ப அதில் பணம் இல்லையெனில் இனிமேல் அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
சமீபத்தில் ரிசர்வ வங்கி வங்களுக்காப ரெப்பொ வட்டி விகிதத்தை குறைத்து, மட்டுமில்லாமல் அதன்பயனை அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டது.
 
இந்நிலையில் தற்பொழுது ஒரு புதிய அறிவிப்பை விடுத்துள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுக்கச் சென்று 3 மணி நேரத்துக்கு மேலாக பணம் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
 
அதவாது ஏடிஎம்களில் உள்ள சென்சார் மூலமாக வங்கிகள் அந்த மெஷினில் எவ்வளவு பணம் உள்ளது என்ற விஷயத்தை தெரிந்துகொள்கிறார்கள். எனவே ஏடிஎம்களில் பணம்  இல்லாத சமயத்தில் வங்கிகள்  தங்கள் ஏடிஎம் மெஷினில் பணத்தை நிரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.
 
இதனால் இனி மக்கள் பணம் இல்லையென்று திருப்புச் செல்ல மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர்.