வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (16:53 IST)

துக்ளக் தர்பார்… படக்குழுவினரை டார்ச்சர் செய்யும் பார்த்திபன்!

துக்ளக் தர்பார் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் இப்போது ஒரு கோரிக்கையை வைத்துள்ளாராம்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் நடித்து வருகிறார் . இந்தப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். ஆனால், கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் நடிகை அதிதிராவ்விற்கு கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த படத்தில் நடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் "துக்ளக் தர்பார்" படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து இப்போது அந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கியுள்ளன.

மேலும் படத்தின் முக்கியமானக் கதாபாத்திரம் ஒன்றில் பார்த்திபன் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் ஹீரோவுக்கு இணையானக் கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது. அதனால் படத்தின் டைட்டிலில் விஜய் சேதுபதி பெயரை போடுவது போல தனது பெயரையும் போட வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறாராம். இதனால் படக்குழுவினர் என்ன செய்வது எனத் தெரியாமல் முழிக்கிறார்களாம்.