வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (16:43 IST)

பட்ஜெட்டைக் குறைத்த அருண் விஜய் & ஹரி – ஆனால் சம்பளத்தை?

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க இருந்த படத்தின் பட்ஜெட்டை குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஹரி சூர்யாவுக்காக தயார் செய்த கதைதான் அருவா. ஆனால் அந்த படத்தின் கதை பிடிக்காததால் சூர்யா நிராகரிக்க அதை அப்படியே தன் மைத்துனரான அருண் விஜய்யை வைத்து இயக்க முடிவு செய்தார். ஆனால் இந்த படத்துக்காக போடப்பட்ட பட்ஜெட்டில் இருவரின் சம்பளமும் பெரும்தொகையை எடுத்துக் கொண்டுள்ளதாம். மொத்தமாக 22 கோடி ரூபாய் பட்ஜெட் என சொன்னதும் எந்த தயாரிப்பாளரும் முனவரவில்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் மங்கு திசையில் இருக்கும் ஹரியை நம்பியும், இப்போதுதான் வளர ஆரம்பித்த அருண் விஜய்யை நம்பியும் அவ்வளவு தொகை செலவு  செய்ய எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை என சொல்லப்பட்டது. இதனால் இப்போது படத்தின் பட்ஜெட்டில் 4 கோடியை குறைத்து 18 கோடி ரூபாய் என சொல்லியுள்ளனராம். படத்தின் பட்ஜெட்டை குறைத்தாலும் இருவரும் தங்கள் சம்பளத்தில் இருந்து எந்த பணத்தையும் குறைத்துக் கொள்ளவில்லையாம். படப்பிடிப்பு தொகையில் இருந்துதான் குறைத்துக் கொண்டுள்ளார்களாம்.