ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (15:56 IST)

பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு – முன்னணி நடிகரின் படத்தில் சம்யுக்தா!

மாடல் சம்யுக்தா இப்போது துக்ளக் தர்பார் படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்சேதுபதி 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் நடித்து வருகிறார் . இந்தப்படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். ஆனால், கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் நடிகை அதிதிராவ்விற்கு கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த படத்தில் நடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் "துக்ளக் தர்பார்" படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து இப்போது அந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்மந்தமாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.