வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (12:09 IST)

”அணு ஆயுத போரை தூண்டுகிறாரா பிரியங்கா சோப்ரா?”: பாகிஸ்தான் பெண் குற்றச்சாட்டு

”அணு ஆயுத போரை தூண்டுகிறீர்களா?” என பிரியங்கா சோப்ராவை பார்த்து ஒரு பாகிஸ்தான் பெண்மணி கேள்வியெழுப்பியுள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகையும், ஐ.நா.வின் நல்லெண்ண தூதருமான பிரியங்கா சோப்ரா, பால்கோட் பயங்கரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் அழித்ததை வாழ்த்தும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் “ஜெய் ஹிந்த்” என பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. அந்த நிகழ்ச்சியின் இடையில், பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ஒரு பாகிஸ்தான் பெண்மணி, அவரிடம், ”ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக இருக்கும் நீங்கள், பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத போரை தூண்டலாமா?” என அவரது டிவிட்டர் பதிவை சுட்டிக்காட்டினார்.

பின்பு இதற்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா, தான் போரை தூண்டக்கூடிய ஆள் இல்லை எனவும், ஆனால் எனக்கு தேசபக்தி அதிகம் உள்ளது எனவும் கூறினார். மேலும் ”பாகிஸ்தானில் என்னை நேசிக்கும் நண்பர்களின் மனம் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன்” எனவும் கூறினார்.

இதனை பார்வையாளர்களில் ஒருவர் வீடியோ எடுத்து டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.