1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (09:27 IST)

காஷ்மீர் விவகாரம் – இந்தியப் படங்களுக்கு பாகிஸ்தான் தடை !

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியதன் எதிரொலியாக இந்தியப் படங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

இந்தியப் படங்களுக்கு குறிப்பாக பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானில் நல்ல வரவேற்பு உள்ளது. தீவிரவாதத் தாக்குதலில் சிக்கிய தீவிரவாதி அஜ்மல் கசாப் கூட நான் அமிதாப் பச்சனைப் பார்க்கதான் இந்தியா வந்தேன் எனக் கூறினான் என்றால் பாலிவுட் படங்கள் எந்தளவு தாக்கத்தை பாகிஸ்தானில் ஏற்படுத்தியுள்ளன என யூகித்துக் கொள்ளுங்கள்.

இந்நிலையில் இந்திய அரசின் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பான நிலைப்பாட்டை அடுத்து இப்போது இந்தியப் படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையைச் சேர்ந்த டாக்டர் ஃபர்டஸ் ஆஷிக் அவான் நேற்று தெரிவித்துள்ள  செய்தியில் ‘எந்த விதமான இந்தியத் திரைப்படங்களும் இனி பாகிஸ்தானில் திரையிடப்படாது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக புல்வாமா தாக்குதலின் போதும் இதுபோல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல இந்திய சினிமாவில் பணிபுரியும் பாகிஸ்தான் கலைஞர்களையும் புறக்கணிக்க வேண்டும் என இந்திய கலைஞர்கள் குரல் எழுப்பினர்.