செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (20:14 IST)

இஸ்ரேல் வீதிச்சண்டையும் அமலாபால் படமும்: பிரபல இயக்குனரின் டுவீட்

அமலாபால் படத்தின் சண்டைக்காட்சி இஸ்ரேலின் வீதி சண்டை போல் இருப்பதாக பிரபல இயக்குனர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகை அமலாபால் நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ’அதோ அந்த பறவை போல’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமலாபாலின் ரிஸ்க் எடுத்து நடித்த சண்டை காட்சிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கோலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலர் அமலாபாலின் கடுமையான உழைப்பிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த டிரைலருக்கு பின்னர் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ’அதோ அந்த பறவை போல’ படத்தின் டிரைலரை பார்த்த பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ’அதோ அந்த பறவை போல’ முன்னோட்டம் வித்யாசமாக இருந்தது. புதிய குழு. பெண்ணையும் இஸ்ரேலின் வீதிச் சண்டையையும் மையமாக வைத்து இயக்கி இருக்கும் தோழர் வினோத் அவர்களுக்கும் அமலாபால் மற்றும் படக்குழுவினர்களுக்கும் வாழ்த்துக்கள்
 
அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தில் அமலாபால், ஆசிஷ் வித்யார்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். வினோத் இயக்கத்தில் ஜேக்ஸ் பிஜாய் இசையில் சாந்தகுமார் ஒளிப்பதிவில் ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது