1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By papiksha
Last Updated : புதன், 8 ஜனவரி 2020 (12:17 IST)

உதயநிதிக்கு இது ஒரு சிறந்த சகாப்தம் "சைக்கோ" ட்ரைலர் ரிலீஸ்!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள "சைக்கோ" படத்தின் ட்ரைலர் சற்றுமுன் படக்குழு வெளியிட்டுள்ளது.
 
கண்ணே கலைமானே படத்தை அடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் மிஸ்கின் இயக்கத்தில் "சைக்கோ" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்ய மேனன் நடித்துள்ளார். மேலும்,  நடிகை அதிதி ராவ் ஹைதாரி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
க்ரைம் திரில் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் "உன்ன நெனச்சு"  ‘நீங்க முடியுமா" என்ற இரண்டு பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதுடன் டந்த அக்டோபர் மாதம் வெளியவந்திருந்த இப்படத்தின் டீசரும் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் ட்ரைலர் சற்றுமுன் படக்குழு வெளியிட்டுள்ளனர்.  வசனம் எதுவும் இந்த ட்ரைலரில் இடம்பெறவில்லை என்றாலும் எடிட்டிங் , BGM , sound effect , உள்ளிட்டவை வேறலேவல்....  இளையராஜா மற்றும் மிஸ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் அமோக வெற்றி பெறும் என ரசிகரகள் தெரிவித்து வருகின்றனர்.