வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (10:55 IST)

அதிரடி ஆக்‌ஷன் அமலாபால்: அதோ அந்த பறவை போல! – ட்ரெய்லர்

அமலாபால் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த ஆடை திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. பல அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்தன. அவ்வளவையும் தாண்டி வெளியான ஆடை சுமாரான வரவேற்பையே பெற்றது. படம் முழுவதும் ஆடையில்லாமல் நடித்ததற்காக அமலாபால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார்.

தற்போது அதற்கு நேர் மாறாக முழுவதும் ஆக்‌ஷன் அதிரடி கலந்த படமான ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் ஈர்த்துள்ளார் அமலாபால். கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் அமலாபாலுடன் ஆஷிஸ் வித்யார்த்தி, சமீர் கொச்சர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பெரிய காடு ஒன்றில் தன்னந்தனியாக மாட்டி கொண்ட அமலாபாலை கொல்ல தேடுகிறது ஒரு கூட்டம். அவர்கள் யார் என்ன என்பது குறித்து தெரியவில்லை. அதேசமயம் அவர்களிடமிருந்து அமலாபாலை வேறொரு குழு காப்பாற்ற நினைக்கிறது. ஆனால் அதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாய் தெரிகிறது. வழிகாட்டியாக ஒரு சிறுவனை வைத்துக் கொண்டு நடுகாட்டில் சாகசம் செய்யும் அமலாபாலின் ஆக்‌ஷன் கதைதான் ’அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் காட்சிகளில் அமலாபால் மெனக்கெட்டு நடித்துள்ளார். ஆடை படத்தில் ஈர்க்காத அமலாபால் ஆக்‌ஷன் படத்தில் ஈர்ப்பாரா என்பது படம் வெளியாகும்போதுதான் தெரியும்!