புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (15:52 IST)

தர்பார்' திரைப்படத்துடன் 'அகோரி' ட்ரெய்லர்!

‘‘சிவ­ன­டி­யா­ராக உள்ள ஓர் அகோ­ரிக்­கும் தீய சக்­தி­க­ளுக்­கு­மி­டையே நடக்­கும்  போராட்டத்தை மையமாக கொண்டு ஆக்­க்ஷன், த்ரில்­லர்,  காமெடி, காதல்,  சென்­டி­மென்ட் என எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி ஆறி­லி­ருந்து அறு­பது வரை உள்ள அனைத்து வய­தி­ன­ருக்­கு­மான  வணிக அம்­சங்­கள் கொண்டு உருவாகியுள்ள படம் "அகோரி" .
 
அறி­முக இயக்­கு­நர் டி.எஸ். ராஜ்­கு­மார் இயக்கம் இப்படத்தில் சாயாஜி ஷிண்டே அகோரியாக நடித்துள்ளார். இவர்களுடன் மைம் கோபி , சித்து,  டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, 'கலக்கப்போவது யாரு' சரத், டிசைனர் பவன் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில்  நடித்திருக்கிறார்கள்.
மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன்   தயாரிக்கும் இப்படத்தில் சகுல்லா மதுபாபு வில்லனாக நடிக்க  ஸ்ருதி ராமகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் ட்ரைலர் 'தர்பார்' படம் வெளியாகும் அனைத்து திரைகளிலும்  வெளியாகிறது. மேலும் 'அகோரி' படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் நல்ல பொழுதுபோக்குடன் அமைந்த திகில் கதையாக இருக்கிறது என்று பாராட்டி யூ / ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.