திங்கள், 16 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (18:39 IST)

’தங்கலான்’ சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? பா ரஞ்சித் அறிவிப்பு..!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். 
 
நாளை மறுநாள் ஜூலை 17ஆம் தேதி புதன்கிழமை ’தங்கலான்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் இந்த பாடல் மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி என்று தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலின் சில நொடிகள் வீடியோவும் அந்த பதிவில் இருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
’தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்க இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  ஜிவி பிரகாஷ் இசையில், கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
Edited by Siva