ஓவியாவின் 90ml படம் வயது வந்தவர்களுக்கு மட்டும்! அதிர்ச்சி தகவல்

Last Modified வியாழன், 7 பிப்ரவரி 2019 (20:20 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற நடிகை ஓவியா நடித்த 'காஞ்சனா 3' வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படமான 90ml திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

இந்த நிலையில் இன்று 90ml படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'A' சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் வயது வந்தவர்களுக்கான படமாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளிவரும் முதல் ஓவியாவின் படத்தை குழந்தைகள் பார்த்து ரசிக்க முடியாதது ஒரு அதிர்ச்சி என்றே கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஓவியா அழகுநிலையத்தில் பணிபுரியும் பெண்ணாக நடித்துள்ளதாகவும், ஒரு பெண் சுயமாக முடிவெடுக்கும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தை இயக்கிய அனிதா உதூப் கூறியுள்ளார்.


மேலும் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகவிருப்பதாக ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஒரு அடல்ட் படத்தில் என்ன மாதிரியான வசனங்கள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது என்பதால் இந்த படத்தின் டிரைலருக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் ரிலீசாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :