ஆரவ்வுடன் லிவிங் டூ கெதரில் வாழ்கிறேனா? உண்மையை உடைத்த ஓவியா!

Last Updated: வியாழன், 3 ஜனவரி 2019 (18:22 IST)
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ்வும், ஓவியாவும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே காதல் கிசுகிசுக்கப்பட்டனர் . பின்னர் ஆரவ் இதை மறுத்த காரணத்தினால் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 


 
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் சகஜமாக பழகி வருகிறார்கள். அவ்வப்போது இவர்கள் பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. ஓவியா ஆரவ்வுடன் நட்பாக சுற்றுவதால் இருவரும் திருமணம் செய்யப் போவதாக செய்தி பரவியது. 
 
இந்நிலையில் தற்போது  இதுபற்றி ஓவியா கூறியதாவது 
 
‘ராஜ பீமா’ படத்தில் நான் ஓவியாவாக தான் நடிக்கிறேன். அது ஒரு கவுரவ வேடம். நானும் ஆரவ்வும் ஆடிய பாடலை, ஆரவ்தான் பாடி இருக்கிறார். அந்த பாடலில் முழுக்க முழுக்க  என்னை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. ‘ஓவியா ஆர்மி’, ‘பிக்பாஸ் குயின்’ போன்று  என்னை வர்ணிக்கும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது. 
 
ஆரவ்வை ஒரு நல்ல நண்பராக எனக்கு மிகவும் பிடிக்கும்  ‘பிக்பாஸ்’ வீட்டில் இருக்கும் போது எனக்கும், ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதனால் நிறைய சண்டைகள் ஏற்பட்டது.
 
ஆனால் நாங்கள் அப்படியில்லை இருவரும்  சமாதானமாகிட்டோம்.சமீபகாலமாக நானும் ஆரவ்வும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், லிவிங் டு கெதர்ல வாழ்றோம்னு பல வதந்திகள் வருது அதெல்லாம் சுத்த பொய் . அப்படி சேர்ந்து வாழ்ந்த நாங்களே சொல்வோம். 


 
ஆனால் ஆரவ் என் நண்பர், எனக்கு ஆதரவாக இருக்கிறார். அதைத்தவிர எனக்குக் கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனால், வாழ்க்கை நம்மை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்னு தெரியாது பார்ப்போம் .
 
கல்யாணத்துல எனக்கு நம்பிக்கையே கிடையாது , அது எனக்கு எந்தவிதத்துலயும் எனக்கு  செட் ஆகாது. அதைத்தவிர எனக்கு ஒருத்தரோட சப்போர்ட் வேணும்னு இப்போ வரைக்கும் தோணல”  என்று ஓவியா தெரிவித்தார். 
 
இதனை அறிந்த ஓவியா ஆர்மிஸ் ...தலைவி சிங்கிள் டா டோய் என ஸ்டேடஸ் போட்டு தெறிக்கவிடுகின்றனர். 
      
 


இதில் மேலும் படிக்கவும் :