"சோறு போட்ட சாமியோவ்" நீ தான் என்னோட ஸ்வீட் ஹார்ட்! - உருகிய ரைசா!

Last Modified செவ்வாய், 29 ஜனவரி 2019 (19:06 IST)
பிக் பாஸ் குயின் "ஓவியா" என்றால் பிக் பாஸ் பிரின்சஸ் "ரைசா"...! அந்த அளவிற்கு பிக் பாஸ் சீசன் ஒன்றில் இவர்கள் இருவரும் பிரபலமடைந்து தங்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டனர். 


 
அந்த  நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இவருக்கும்  ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார். ஆனால் ஓவியா இந்த விஷயத்தில் சற்று பின்தங்கிவிட்டார். 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே வி ஐ பி- 2 படத்தில் நடித்த ரைசா பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன  ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் பெரும் ‘ஆலிஸ்’ என்ற படத்திலும் ஜிவி பிரகாஷுடன்  நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் , சமீபத்தில் உணவகம் ஒன்றிற்கு சென்ற நடிகை ரைசா பர்ஸை மறந்துவிட்டு சென்றுள்ளார். சாப்பிட்டுவிட்டு பில் கட்டும் போது தான் அவருடைய பர்ஸை வீட்லேயே விட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று திகைத்துள்ளார் ரைசா. 
 


 
பிறகு டாக்ஸி டிரைவர் ஒருவர் ரைசாவின் பில்லை செட்டில் செய்து உதவியுள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரைசா அந்த நபருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :