ஓவியாவுக்கு சிம்பு தரும் '90ml' பொங்கல் விருந்து

Last Modified வியாழன், 17 ஜனவரி 2019 (11:39 IST)
பிரபல நடிகை ஓவியா நடித்து வரும் '90ml' திரைப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்காக சிம்பு நான்கு பாடல்களையும் இரண்டு தீம் மியூசிக்களும் கம்போஸ் செய்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் பொங்கல் விருந்தாக இந்த படத்தின் பாடல் ஒன்றை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 'பிரெண்டிடா' என்று தொடங்கும் இந்த பாடலை சிம்பு இதுவரை இல்லாத வகையில் மிக ஸ்டைலாக கம்போஸ் செய்துள்ளதாகவும், நட்பை விரும்பும் இளைஞர்கள் அனைவரும் இந்த பாடலை விரும்புவார்கள் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இந்த படத்தில் ஒரு பாடலை ஓவியா முதல்முறையாக பாடியுள்ளார் என்பதும் அந்த பாடல் சமீபத்தில் தான் ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க நகைச்சுவை படமான இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :