ஓவியா செய்ய தவறியதை செய்த பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்; என்ன தெரியுமா?
தமிழில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு, நிகழ்ச்சி முடிந்த பிறகு சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. பிக்பஸின் மூலம் மக்களின் பேரதவை பெற்றவர் ஓவியா. இவருக்காக ரசிகர்கள் ஓவியா ஆர்மியை உருவாக்கினார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா தனது ரசிகர்களிடம் அவ்வப்போது பேசி வந்தார். அப்போது தான் நலமுடன் இருப்பதாகவும், கூடிய சீக்கிரம் உங்களுடன் லைவ் சாட் செய்வேன் என கூறினார். ஆனால் சொன்னபடி அவர் நடந்து கொள்ள வில்லை. இதனால் ஓவியா ரசிகர்கள், தல பாட்டுக்கு ஓவியா டான்ஸ் ஆட நேரமிருக்கு எங்களுடன் சாட் செய்ய இல்லையோ என்று சில ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
இந்நிலையில் ஓவியா செய்ய தவறிய விஷயத்தை ஹரிஷ் கல்யாண் செய்ய உள்ளாராம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வந்தாலும், தனக்கென ஒரு ரசிகை பட்டாளத்தை ஏற்படுத்தியவர் ஹரிஷ் கல்யாண். இந்நிலையில் ரசிகைகளின் டார்லிங்காக இருக்கும் ஹரிஷ் கல்யாணிடமும் சாட் செய்ய பலர் விரும்பினர். இதையடுத்து அவர் இன்று இரவு 8 மணிக்கு ஃபேஸ்புக் லைவ் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.