1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 15 நவம்பர் 2017 (13:02 IST)

நடிகையின் மேலாடை பட்டனை அவிழ்க்க முயன்ற போட்டியாளர்: பிக்பாஸில் சர்ச்சை

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரை ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி தமிழ்  ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு சண்டை, சர்ச்சைகள் விறுவிறுப்பாக போனது. வெற்றிகமாக  இதன் முதல் சீசன் முடிவடைந்தது. இதில் வெற்றியாளராக ஆரவ் வெற்றி பெற்றார்.

 
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் 11-வது சீசன் சென்றுகொண்டிருக்கிறது. ஹிந்தியில் இந்த நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். தற்போது நிகழ்ச்சியில், இந்தி சீசனில் ஹாட் டாப்பிக் என்னவென்றால், நடிகை பன்தகி  கால்ரா, தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் புனீஷ் ஷர்மா ஆகியோரிடையே நிலவிவரும் நெருக்கமான உறவு குறித்து  பேசப்படுகிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நெருங்கி பழகிய இவர்கள், நாளுக்கு நாள் தங்களது நெருக்கத்தை அதிகரித்தனர். ஆனால் இவை டிஆர்பிக்காக இப்படி செய்வதாக பலரால் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேமரா இருப்பதை மறந்து பல சமயங்களில் இவர்கள் அத்துமீறிய சம்பவங்கள்  நிகழ்ச்சியில் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில்  தற்போது பன்தகி கால்ராவுக்கு, புனீஷ் முத்தம் கொடுப்பது போன்றும்,  அவரது ஆடையை களைய முயற்சிப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்ட அந்த விடியோவில்  சோபா மீது அமர்ந்திருக்கும் இருவரும் நெருக்கமாக பேசிக்கொள்கின்றனர். அப்போது திடீரென பன்தகி கால்ராவின் முகத்தில் புனீஷ் முத்த மழை பொழிகிறார். தொடர்ந்து பேச்சைத் தொடர்ந்துகொண்டிருக்கையில், கல்ராவின் மேலாடை பட்டன் மீது கை  வைத்து அதை அவிழ்க்க புனீஷ் முற்படுவது போன்ற காட்சிகள் உள்ளது.
 
ஏற்கனேவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான்கான் நிகழ்ச்சியை அனைவரும் பார்த்துக்கொண்டிருப்பதால், எல்லோரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என பலமுறை எச்சரிக்கை செய்தார். இந்நிலையில் போட்டியாளர்களும் வாக்குறுதி  அளித்த நிலையில், இரண்டே நாட்களில் அதனை காற்றில் பறக்கவிட்டு இப்படியொரு அசிங்கத்தை அரங்கேற்றியுள்ளனர். இது  பலரை அதிர்ச்சியில் ஆழ்த்துயுள்ளது.