திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (22:15 IST)

பிக்பாஸ் ஜூலியை சினிமாவில் அறிமுகப்படுத்தும் இயக்குநர் யார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடைப்பெற்றது. அதில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சினிமா பிரபலம் இல்லாதவை ஜூலி மட்டும்தான்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களுக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஜூலிக்கும் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சேர்ந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் ஜூலியின் கழுத்தில் ஒருவர் கத்தி வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக  வலைதளங்களில் வைரலானது. அது யார் என தற்போது தெரியவந்துள்ளது. அதில் பிரபல விளம்பர பட இயக்குநர் பாபா பகுர்தீன்தான் அது. ராமநாதபுரம் இலாஹி ஷாப்பிங் மாலுக்காக அவர் இயக்கிய விளம்பர வீடியோவில் ஜூலி நடித்துள்ளார்.  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.
 
இந்த நிலையில் மால் உரிமையாளர் ஜூலி வேண்டாம் என கூறியும் பகுர்தீன் பலமுறை வற்புறுத்தி ஒத்துகொள்ள வைத்துள்ளார். மேலும் பகுர்தீன் இயக்கவுள்ள ஒரு படத்தில் ஜூலி ஹீரோயினுக்குச் சமமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக  தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பகுர்தீனை பலரும் பாராட்டி வருகின்றனர்.