ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (13:55 IST)

பிக்பாஸ் நடிகையின் இந்த செயலால் வேதனை; மருத்துவமனையில் தந்தை

பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் 11வது சீசன் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்கி  வருகிரார். தற்போது நிகழ்ச்சியில் நடிகை பன்தகி கால்ரா, தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் புனீஷ் ஷர்மா ஆகியோரிடையே நிலவிவரும் நெருக்கமான உறவு குறித்து பேசப்படுகிறது.

 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேமரா இருப்பதை மறந்து பல சமயங்களில் இவர்கள் அத்துமீறிய சம்பவங்கள்   நிகழ்ச்சியில் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில்  தற்போது பன்தகி கால்ராவுக்கு, புனீஷ் முத்தம் கொடுப்பது போன்றும்,   அவரது ஆடையை களைய முயற்சிப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
போட்டியாளராக உள்ள மாடல் மற்றும் நடிகை பன்தகி கால்ரா சக போட்டியாளரான புனீஷ் சர்மாவுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற சீன்கள் வெளியானதால், நடிகையின் தந்தை ரத்தஅழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் குடும்பத்துடன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி  கூறிவிட்டாராம்.
 
நிகழ்ச்சியில் பன்தகி கால்ரா இரவு நேரங்களில் புனீஷ் சர்மாவுடன் ஆபாசமாக பேசிக்கொள்வது, பெட்ஷீட்டில் ஒன்றாக  படுத்துக்கொள்வது, பாத்ரூமில் ஒன்றாக இருந்தது என பல்வேறு நிகழ்வுகள், அந்த அபார்ட்மெண்டில் இருப்பவர்களுக்கும்,  குழந்தைகளுக்கும் தவறான உதாரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டின் உரிமையாளர் இவ்வாறு கூறியுள்ளதாக  தெரிகிறது.
 
இந்நிலையில் பன்தகி கால்ரா பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியில் வந்தவுடன் பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்ப  வேண்டியதுதான் என்றும் கூறப்படுகிறது.