வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (18:52 IST)

சினிமாவுக்கு சலுகைகள்..’’முதல்வருக்கு சூப்பர் ஸ்டார் நன்றி !

கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள சினிமாத்துறைக்கு சில சலுகைகள் அறிவித்துள்ளார். இதற்கு சூப்பர் ஸ்டார்  மோகன்லால் பெரும் நன்றி தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள சினிமாத்துறைக்கு சில சலுகைகள் அறிவித்துள்ளார் அதில்,

கொரோனா காலத்தில் 10  மாதங்களாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்களுக்கு
திரையரங்குகளில் உரிமம் புதுப்பித்தலுக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுவதாகவும், 10 மாதங்களில் மூடப்பட்டிருந்த திரையரங்குகளின் மின் கட்டணம் 50% ஆக குறைக்கப்படுவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளது கேரள சினிமாத்துறைக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கேரள மாநில திரையரங்குகளுக்கு  ஜனவரி முதல் மார்ச் வரை கேளிக்கை வரி வசூலிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், பினராயி விஜயன் கேரள சினிமாத்துறைக்கு அறிவித்துள்ள சலுகைக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கேரளாவில் வரும் 13 ஆம் தேதி மாஸ்டர் படம் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

മലയാള സിനിമയ്ക്ക്‌ ഊർജ്ജം പകരുന്ന ഇളവുകൾ പ്രഖ്യാപിച്ച ബഹുമാനപ്പെട്ട കേരള മുഖ്യമന്ത്രി ശ്രീ.പിണറായി വിജയന്‌ സ്നേഹാദരങ്ങൾ

Posted by Mohanlal on Monday, 11 January 2021