செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (09:14 IST)

மூத்த குடிமக்களுக்கு பாதிக்கு பாதி கட்டண சலுகை! – ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!

கொரோனா தளர்வுகளை தொடர்ந்து இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியுள்ள நிலையில் மூத்த குடிமக்களுக்கு விமான கட்டணத்தில் சலுகையை அறிவித்துள்ளது ஏர் இந்தியா.

இந்தியாவில் கோரோனா காரணமாக பல மாதங்களாக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் தொடங்கி நடந்து வருகின்றன. எனினும் விமானத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க குறைவான நபர்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் விமான பயணங்களை அதிகரிக்க ஏர் இந்தியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏர் இந்தியாவில் உள்நாட்டு பயணங்களில் 60 வயதிற்கும் அதிகமாக உள்ள இந்திய மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா பயண கட்டணத்தில் 50 சதவீதம் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண சலுகை உள்நாட்டு ஏர் இந்தியா சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் இந்த கட்டண சலுகையில் எக்கானாமிக் வகுப்புகளில் மட்டுமே புக்கிங் செய்ய முடியும் என்றும், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.