1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (12:29 IST)

Flipkart Big Billion Days - இன்று முதல் சிறப்பு விற்பனை!!

பிளிப்கார்ட் தனது ’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை இன்று முதல் துவங்குகிறது. இந்த விற்பனை குறித்த முழு விவரம் இதோ...  
 
’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை அக் 16 முதல் அக் 21 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு அக்.15 முதலே (இன்று) இந்த சிறப்பு விற்பனை துவங்கும். இந்த விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ... 
 
# போகோ எம் 2 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரோம் அசல் விலையான ரூ.10,499-லிருந்து, ரூ.500 தள்ளுபடியில் விற்கப்படும். 
# போகோ எம் 2 ப்ரோ அதன் ஆரம்ப விலையிருந்து ரூ.1,000 குறைந்து ரூ.12,999-க்கு விற்கப்படும். 
# ரியல்மீ சி 11 ரூ.6,499 என்ற அதன் ஆரம்ப நிலையிலிருந்து ரூ.1,000 குறையும். 
# மோட்டோ இ 7 பிளஸ் ரூ.500 தள்ளுபடி செய்து ரூ.8,499-க்கு விற்கப்படும். 
# மோட்டோ ஜி 9 ரூ.11,499-லிருந்து குறைந்து விற்பனையின் போது ரூ.9,999-க்கு கிடைக்கும். 
# மோட்டோ ஃப்யூஷன் பிளஸ் ரூ.15,999-க்கு விற்கப்படும், வெளியீட்டு விலையிலிருந்து ரூ.1,000 குறையும்.
# மோட்டோ ஜி 9 ரூ.11,499-க்கு பிளிப்கார்ட் விற்பனையின் போது ரூ.9,999-க்கு விற்கப்படும். 
# மோட்டோ எட்ஜ் பிளஸ் ரூ.10,000 தள்ளுபடியில் ரூ.64,999 என்ற விலையில் கிடைக்கும். 
# iQOO 3 ரூ.29,990 தள்ளுபடி விலையில் விற்கப்படும்.
# சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ், ரூ.49,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். 
 
இந்த விற்பனையின் போது எஸ்.பி.ஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10% உடனடி தள்ளுபடியை வழங்கப்படும். மேலும், பிக் பில்லியன் டேஸ் விற்பனையின்போது வாங்குபவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், மின்னணு கேஜெட்டுகள், உடைகள் மற்றும் பலவற்றில் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வழங்கப்படவுள்ளது.